அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி அரக்கோணம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் வாக்கு சேகரித்தார்.
வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களிடம் அவர் பேசும்போது, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு வழங்கி உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து விளக்கினார். பின்னர் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘‘மத்தியில் பிரதமராகும் வகையில் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறி, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.
அப்போது சு.ரவி எம்.எல்.ஏ., நகர செயலாளர் துரைகுப்புசாமி, துணை செயலாளர் என்.தனபால், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் அருள்மூர்த்தி, தொகுதி செயலாளர் சி.காமராஜ், கவுன்சிலர்கள் ஜெர்ரி, ஐயப்பன், மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.நாகராஜ், நகர அவைத்தலைவர் ஜே.பி.பழனி, தனசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
246 total views, 1 views today
