ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதமுத்து தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மாவட்ட பொருளாளர் சுதாபிரியா முன்னிலை வகித்தார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த இம்தாத் ஷெரிப் பேசுகையில்,‘ நாங்கள் வெற்றி பெற்றால் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். என் மீது ஊழல் குற்றம் ஏதேனும் இருந்தால் பொதுமக்களே நடவடிக்கை எடுக்கலாம். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜேஷ் பேசுகையில்,‘ மதச்சார்பற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வேலூர், அரக்கோணம் பகுதியில் 30 சதவீத வாக்குகள் உள்ளது. டெல்லியில், எங்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகளை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்றார்.
கூட்டத்தி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
529 total views, 1 views today