தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக டிசம்பரில் நடக்கவிருக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி மாதம் ஒத்தவைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாது சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது.
அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு குறித்த அரசு பிறப்பித்த உத்தரவு, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
282 total views, 1 views today
