கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த காட்டலாங்கோ லியோன் என்பவருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது என்ற தகவல் இப்பொது வெளியாகி இருக்கிறது.
அறிவியல், தொழில் நுட்ப பிரிவில், காட்டலாங்கோ லியோனுக்கும், அவரது குழுவினருக்கும் கூட்டாக ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. விருது விழாவில் அவர் ‘அனைவருக்கும் நன்றி’ என கூறி தமிழ் கூறும் நல்லுலகை சிலாகிக்க வைத்திருக்கிறார்.
தற்போது சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க் நிறுவனத்தில் பணியாற்றி வரும் காட்டலோங்கோ லியோன் மற்றும் அவரது குழுவினர் ‘இட்வியூ’ என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த மென் பொருள், திரைப்படத்தை முப்பரிமான வடிவில் பகுதி பகுதியாக அலசி ஆராய்வதற்கு உதவுவதாகும்.
தூத்துக்குடியில் லூர்து- ராஜம் மரிய சிங்கம் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியை தம்பதியரின் மகனாக பிறந்த இவர், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்று அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார். அதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
230 total views, 1 views today