ஆம்பூர்,மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா தலைமை தாங்கினார்…சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், குளிர்பானம், மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தொகுதி செயலாளர் ஆர்.வெங்கடேசன், அவைத்தலைவர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பரசன், கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
210 total views, 1 views today