அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக சு.ரவி எம்.எல்.ஏ. நரிக்குறவர்களிடம் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். சு.ரவி எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றியகுழு தலைவரும், ஓன்றிய செயலாளருமான பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர் தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியில் கோ.அரிக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும்படி வாக்குகள் சேகரித்தனர்.

வாக்குகள் சேகரிக்க அ.தி.மு.க.வினர் சென்ற போது நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த சினிமா பாடல்களை பாடியும், ஆடியும் கட்சியினரை வரவேற்றனர். இந்த வாக்குசேகரிப்பில் தொகுதி இணை செயலாளர் நாகபூஷணம், அவைத்தலைவர் கிருஷ்ணசாமி, துணை செயலாளர் என்.தாஸ், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சி.பத்மநாபன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எம்.நவாஸ், தணிகைபோளூர் ஊராட்சி மன்ற தலைவர் சரளாபீரவீண்குமார், ஊராட்சி செயலாளர் பி.ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கோ.அரி தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ராணிப்பேட்டை நகரில் உள்ள 30 வார்டுகளிலும் வாக்குகள் சேகரிக்கும் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் ஜே.பி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம், நகர அவைத் தலைவர் குமரன், மாவட்ட பேரவை செயலாளர் முரளி, இணை செயலாளர் கே.பி.சந்தோஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் கோ.அரி, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் பொன்னையன், சுமைதாங்கி சி.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரை சிந்தாமணி விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர் கோ.அரி வாக்கு சேகரித்தார்.

இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் நகர செயலாளர் திருஞானசம்பந்தம், நிர்வாகிகள் ஷாபுதீன், தியாகு, நித்யா, என்.கே.மணி, ராமமூர்த்தி, அசோக், நகரசபை உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாதனூர் ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மாதனூர் ஒன்றிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி மத்தியில் அமைந்திட அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.

அப்போது மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் மதியழகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டில்லிபாபு, விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன், ஒன்றிய அவைத்தலைவர் வேலு, பொருளாளர் ரத்தினம், மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பரசன், கலாசவுந்தராஜன், ரத்தினம், ஜேக்கப், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜா ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி, காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாலாஜா ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வேட்பாளர் கோ.அரி தொகுதிக்குட்பட்ட அக்ராவரம், சீக்கராஜபுரம் ஆகியவை உள்பட 9 ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் வாலாஜா ஒன்றிய செயலாளர் எம்.சி.பூங்காவனம், காட்பாடி ஒன்றிய செயலாளர் குமார், காட்பாடி தொகுதி செயலாளர் பிச்சாண்டிபாபு, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நாராயணன், அண்ணாதொழிற்சங்க செயலாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தெய்வசிகாமணி, சுமதி ஜெயசீலன், அஷ்டலட்சுமி வினோத், சுமதிவேலு, சரோஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமாரி செல்வகுமார், நிர்வாகிகள் ஈஸ்வரி ஜெயராமன், லாலாப்பேட்டை மணி ஆகியோர் உள்பட அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று வாக்கு சேகரித்தனர்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாட்டறம்பள்ளி,

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வனரோஜா நாட்டறம்பள்ளி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி, ஒன்றிய குழு தலைவர்கள் பாரதிராஜா, ஆர்.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமலதா, கணேஷ்பாபு, அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூராட்சி செயலாளர் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

218 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.