வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து கே.வி.குப்பம் தொகுதி லத்தேரியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர்கள் லத்தேரி எல்.எம்.பாபு, சுரேகா, ஒன்றிய கவுன்சிலர் கனகவள்ளி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் டி.பன்னீர்செல்வம், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜி.ஜி.ஆர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் பெரியசாமி வரவேற்றார். கூட்டத்தில் நடிகை விந்தியா, வேட்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜி.லோகநாதன், துணைத்தலைவர் உமாபதி, குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கோதண்டன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
269 total views, 1 views today