அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அரியை ஆதரித்து சசிகலா புஷ்பா எம்.பி. இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா செய்த நலத்திட்டங்களை பொதுமக்களிடையே விளக்கி வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பவானிகருணாகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்று பேசினார்.
கவுன்சிலர்கள் அய்யப்பன், பொன்பார்த்திபன், நகர துணை செயலாளர் என்.தனபால், மாவட்ட பாசறை துணைத்தலைவர் ஷியாம்குமார், கட்சி நிர்வாகிகள் ஜே.பி.பழனி, கன்னியப்பன், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
347 total views, 2 views today
