20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.
இந்திய அணி தனது முதல் 3 ‘லீக்’ ஆட்டங்களில் வெற்றி பெற்றது. வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது.
நேற்று இந்தியா தனது 4–வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்தித்தது. இதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 9 விக்கெட்டுக்கு 81 ரன்னே எடுத்தது.
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து 6–வது வெற்றியை பெற்றது. இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 2 வெற்றி பெற்று இருந்தது. வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:–
அடுத்து இறுதிப் போட்டியில் மோத இருக்கிறோம். இது மிகப்பெரிய போட்டி. இதில் இதைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வங்காளதேசம் சிறந்த அணியாகும். அவர்களை நிறைய முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும்.
இந்தியா– வங்காளதேசம் அணிகள் இறுதிப்போட்டி வருகிற 6–ந்தேதி நடக்கிறது.
229 total views, 1 views today