தமிழகம் முழுவதும் 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதினார்கள். இதில் 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்தது…வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி வேலூர் முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டது.
இந்த நிலையில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்று 5 சதவீத மதிப்பெண்கள் குறைக்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 40 பேர் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.இந்த பணி வருகிற 12–ந் தேதி வரை நடக்கிறது
175 total views, 1 views today