பூமி வேகமாக வெப்பமடைந்து வருவதால் அண்டார்டிகா, ஆர்டிக் பிரதேசங்கள், வட துருவங்கள் மற்றும் கிரீன்லாந்து போன்ற பனிபிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன.
இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது, இந்த பனிப்படலங்கள் முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் சில முக்கியமான நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமடைந்து வருவதால் உலகில் கடல் மட்டம் 8 அங்குலம் வரை உயர்ந்துள்ளதாள், பல கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் கடற்கரை மட்டம் உயர்ந்து வருகிறது. தற்பொழுது வேகமாக உருகி வரும் கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுமையாக உருகிவிட்டால் தற்போது உள்ளதை விட 23 அடி வரை வர கடல் மட்டம் உயரலாம் என ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு நடந்தால் உலகின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, துபாய், சிங்கப்பூர், ஷாங்காய், நியூயார்க், சிட்னி, இஸ்தான்புல், லண்டன், கேப்டவுன், டோக்கியோ போன்ற நகரங்கள் நீரில் மூழுகும் அபாயம் இருபதாகவும் அமெரிக்காவின் 315 நகரங்களும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நகரங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நீண நாட்களுக்கு முன்பே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 100 செ.மீட்டர் உயந்துவிடும் என்றும் கடற்கரை நகரங்களின் சராசரி ஆண்டு இழப்புகள் வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
281 total views, 1 views today