ஜோலார்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்…ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரி குப்பம் என்ற இடத்தில் புள்ளானேரி ஊராட்சி சார்பாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
அதன் அருகே ஏற்கனவே மூக்கனூர் கிராம மக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது.
புதிதாக அமைக்கும் ஆழ்துளை கிணறுக்கு மூக்கனூர் கிராம பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து மூக்கனூர் கிராம பொது மக்கள் திருப்பத்தூர் –புதுப்பேட்டை சாலை குட்டூர் என்ற இடத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தால் எங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு சரிசெய்யப்படும்’ என்றனர்.இதனையடுத்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
208 total views, 1 views today