இனி வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இலவசமாகவே கிடைக்கும்

google-nexus-WhatsAppஇனி வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இலவசமாகவே இறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தா கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருட இலவச பயன்பாட்டுக்கு பிறகு, சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது.

 

இதனால் உலகம் முழுக்க வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதையடுத்து, இனி வரும் காலத்தில், ஆண்டு சந்தா இன்றி, இலவசமாக பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

285 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.