ஊராட்சி அமைப்புகளில் மகளி ருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரும் வகையில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வார்டுகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பதை ஒரு முறை என்பதிலிருந்து 2 முறையாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், இந்த பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தற்போது 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
202 total views, 1 views today