எதிர்காலத்தில் ரோபோக்களின் வருகையால் 5 மில்லியன் வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம்

123779_robot-waitressமனிதர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவும் முறை தொழில் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது.

 

 

 

இப்படி, மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் நிறுவி வருவதால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 இலட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து உள்ளதாக உலக பொருளாதார பேரவையின் பிரபல ஆய்வு ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

 

 

புதிய தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் சவால்களை பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வு. ஐ.நா. அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஏற்கனவே ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.

அதாவது, வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் அபாய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஒரு புதிய வேலை உருவானால் அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் 3 வேலைவாய்ப்புகள் மறையும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

218 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.