வேலூர்,ஆற்காட்டில் நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் கங்காதர ஈஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவிலில் 60–வது ஆண்டு லட்ச தீப விழா நடைபெற்றது….விழாவையொட்டி காலையில் மகா அபிஷேகமும், மாலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவில் தேவார இசையுடன் சுவாமி வீதி உலாவும், நாதசுர, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவிற்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு லட்ச தீப விழாவை தொடங்கி வைத்தனர்.
290 total views, 1 views today
