கட்டுமான தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில் கட்டுமான பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டிடம் மற்றும் இதர கட்டுமானங்கள் சட்டத்தின் கீழ் ஆம்பூர், செய்யாறு, செங்கம் போன்ற இடங்களில் 5 பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

வேலூர் 2–ம் கோட்டம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் மு.அ.முகம்மது கனி, கட்டிட பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் கட்டிட தொழிலாளர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும் என்று விளக்கி பேசினர். அத்துடன் ஒலி–ஒளியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தினர். இதில் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்த தகவலை வேலூர் 2–ம் கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

677 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.