தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…வங்கக் கடலில் ஞாயிற்றுக் கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த பகுதியாக உள்ளது. மேலும் தீவிரமாகி வட கிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
184 total views, 1 views today