குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வி.மணி, தாசில்தார்கள் கமலக்கண்ணன், விஜயன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் குடியாத்தம் வட்டத்தில் உள்ள 1,997 அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மோகன், அண்ணாமலை, கலைராணி, தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
211 total views, 1 views today
