குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் கோவில் சிரசு பெருவிழா இன்று நடக்கிறது…இதனையொட்டி நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனையொட்டி நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேலூர் மாவட்டத்தின் அடையாள திருவிழாவாக விளங்குவது குடியாத்தம் கோபாலபுரம் கெங்கை அம்மன் சிரசு திருவிழாவாகும்.
இன்று 15–ந் தேதி (வியாழக்கிழமை) கெங்கை அம்மன் சிரசு பெருவிழா நடைபெறுகிறது. விழாவை யொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண்திறப்பு, வாண வேடிக்கை, பக்தர்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ஆ.வடிவேல், நிர்வாக அதிகாரி ப.பரந்தாம கண்ணன், ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா எம்.குப்புசாமி, கோவில் எழுத்தர் ஜோதி மற்றும் திருப்பணிக் குழுவினர், முன்னாள் அறங்காவலர்கள் குழுவினர், விழாக் குழுவினர், கோபாலபுரம் வாசிகள் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.இவ்விழாவிற்காக இன்று வழக்கம்போல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
228 total views, 1 views today