தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் தொகுதிக்கு துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று போலீசாருடன் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் இருந்து எஸ்.ஆர்.கேட் பகுதி வரை காந்தி சாலை வழியாக ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
தேர்தல் நேரத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நாங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளோம் என்பதை அறிவிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாக துணை சூப்பிரண்டு கண்ணப்பன் கூறினார்.
கொடி அணிவகுப்பில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சோளிங்கர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், நீலகண்டன், சுந்தரேசன், சீனிவாசன், சுப்பிரமணி, சின்னப்பன் மற்றும் மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தயாரானதையொட்டி திருப்பத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். டவுன் போலீஸ் நிலையம் அருகில் தொடங்கிய அணிவகுப்பை திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுஜாதா தொடங்கி வைத்து, அணிவகுப்பிற்கு தலைமை தாங்கி நடத்திச்சென்றார்.
ஊர்வலமானது கிருஷ்ணகிரி மெயின்ரோடு, புதுப்பேட்டை ரோடு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் வழியாக சென்று மீண்டும் டவுன் போலீஸ் நிலையத்தை அடைந்தது.
இந்த அணிவகுப்பில் மத்திய போலீசார் உள்பட 300 -க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
203 total views, 1 views today