வேலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இருப்பிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது.வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பால்சுதந்திரதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்ட பிரிவின் மூலம் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை கண்டறியும் திட்டத்தின் கீழ் 2014 –2015–ம் ஆண்டிற்கான இருப்பிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் நாளை முதல் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியிலும்,திருப்பத்தூர்ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கிலும் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 30 மாணவ, மாணவிகள் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 நாட்கள் நடைபெற உள்ள உண்டு உறைவிட பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
211 total views, 1 views today