சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர்.
நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து லட்சத்துக்கான காசோலையை அவர் அளித்தார்.
நேற்று சரோஜாதேவியின் பிறந்தநாள் என்பதால் நாசர், சிவகுமார், குட்டி பத்மினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்னையிலுள்ள சரோஜாதேவியின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அவர் 5 லட்சத்துக்கான காசோலையை சிவகுமார், நாசரிடம் அளித்தார்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வீட்டை பராமரிக்க எம்.ஜி.ஆர். ரசிகர்களை சரோஜாதேவி முன்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
257 total views, 1 views today