வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாலைகெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது….வேலூர் சத்துவாச்சாரியில் சாலை கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தேர் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். அதன்படி கடந்த 15–ந் தேதி திருவிழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.18–ந் தேதி மறு காப்பு அணிவித்தலும், 19–ந் தேதி இரவு ஆதிபராசக்தி வீதி உலாவும், 20–ந் தேதி இரவு தனலட்சுமி வீதி உலாவும், 21–ந் தேதி இரவு சிவலிங்க பூஜை மற்றும் வீதி உலாவும் நடைபெற்றது.தேர் இழுத்து வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆங்காங்கே குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய தேர் வீதி உலா மாலை 6 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இன்று காலை 9 மணிக்கு சிரசு ஏற்றம் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.
550 total views, 1 views today