சென்னை, ஈரோடு, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் 2012–ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இந்த மையங்களில் உள்ள விடுதிகளில் சேர விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் 10 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 25 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை விளையாட்டு விடுதியில் சேர்த்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
இங்கு சிறுவர்களுக்கு தடகளம், சிறகுப்பந்து, மேசைப்பந்து, தேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கும், சிறுமிகளுக்கு தடகளம், சிறகுப்பந்து, மேசைப்பந்து, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
விளையாட்டு விடுதியில் சிறுவர், சிறுமியர்கள் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகங்களிலும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20–ந்தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
விளையாட்டு மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற தகுதித்தேர்வு போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26–ந்தேதி நடைபெற உள்ளது. மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
197 total views, 1 views today