கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமெரிக்கா வாழ் இந்தியரான சுந்தர் பிச்சை 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐதராபாத்தில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள 100 ரயில்கள் நிலையங்களில் வைபை வசதி செய்து தரப்படும் என அவர் தெரிவித்தார்.
அதற்காக இந்திய ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவான ரயில் டெல் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பதாக சுந்தர் பிச்சை கூறினார். இந்த ஒப்பந்தத்தின் படி 400 ரயில் நிலையங்களில் வைபை வசதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
287 total views, 1 views today