ஒடுகத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது…இதில் ஆயிரக்கணக்கான வாழை, தென்னை மரங்கள் சேதம் அடைந்தது.ஒடுகத்தூர் அடுத்த பள்ளிப்பட்டு, பாக்கம்பாளையம், சின்னபள்ளிக்குப்பம், கொல்லகொட்டாய், குப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 150 ஏக்கரில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தனர்.அறுவடைக்கு தயாரான நிலையில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் 150 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
384 total views, 1 views today