இதுவரை மோடியை விமர்சிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்குக் காரணம், தனியார் நிறுவனம் எடுத்துக் கொடுத்த சர்வே ரிசல்ட்தான் என்கிறது அதிமுக வட்டாரம்.
ஜெயலலிதா பாஜக-வை விமர் சிக்கவில்லை என்று சொல்லி அதிமுக-வுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத், தற்போது திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஜெயலலிதா பாஜக-வை கடுமை யாக எதிர்த்து பேசி வருகிறார். இதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமா அத் விலகியது மட்டும் அல்ல; தனியார் உளவு நிறுவனம் கொடுத்த ஓர் அறிக்கையும் காரணம் என்று அதிமுக-வினர் தெரிவிக்கின்றனர்.
அந்த அறிக்கையில், ‘மத்தியில் பாஜக கூட்டணி சுமார் 275 இடங்களைப் பெறும்; இவை தவிர, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ், சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்., ராஜ்தாக்ரேவின் மகாராஷ்டிரா நிர்மாண் சமிதி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுயேச்சைகள் என சுமார் 30 எம்.பி-க்களின் ஆதரவு பாஜக-வுக்கு கிடைக்கும். இதனால், தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக-வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதா ஆரம்பத்தில் இளைஞர்களின் ஓட்டுக்கள் அதிமுக-வுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ரஜினியை மோடி சந்தித்த காட் சியின் முகநூல் பக்கத்தின் ‘லைக்’ குகள் 10 லட்சத்தை தாண்டி விட்டது. நடிகர் விஜய் மோடியைச் சந்தித்த காட்சிகளுக்கான முகநூல் ‘லைக்’குக்கள் இரண்டு லட்சத்தை தாண்டி போய்க்கொண்டிருக் கிறது. இதனால், சுமார் ஏழு சதவீத அளவிலான இளைஞர்கள் கூட்டம் மோடி பக்கம் சாயலாம் என அதிமுக-வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அதிமுக-வுக்கு வரவேண்டிய ஓட்டுகளுக்கும் சேர்த்து பாதிப்பு எழுந்துள்ளது.
தேர்தலுக்கு பிறகு அதிமுக-வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்படாது. அதேபோல் அவர்களின் தயவில் ஜெய லலிதா பிரதமர் ஆவதும் சாத்திய மில்லை.
திமுக ஆரம்பத்தில் இருந்தே பாஜக-வை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருவதால் நாம் அமைதியாக இருந்தாலும் மதச்சார்பற்றோர் மற்றும் சிறு பான்மையினர் ஓட்டுகள் கைவிட் டுப் போகும் என்று அதிமுக கருதுகிறது.
இதனாலேயே பாஜக-வையும் மோடியையும் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது அதிமுக.
280 total views, 1 views today