ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி-20 போட்டிகளுக்கு டோணி தலைமையிலான 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி 20 தொடர் பிப்ரவரி 24-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் கலந்துகொள்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை 6-வது உலகக் கோப்பை டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்த இரு போட்டிகளுக்குமான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டோணி தலைமையிலான இந்திய அணி வீரர்கள்:
- மகேந்திர சிங் தோனி (கே&வி.கே)
- விராட் கோலி
- ஷிகர் தவான்
- ரோஹித் சர்மா
- யுவராஜ் சிங்
- சுரேஷ் ரெய்னா
- ஹர்பஜன் சிங்,
- ரவீந்திர ஜடேஜா
- அஜிங்கே ரஹானே
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- முஹமது ஷமி
- ஹர்த்திக் பாண்டியா
- ஜாஸ்பிரிட் பும்ரா
- பவன் நெகி
- ஆஷிஷ் நெஹ்ரா
251 total views, 1 views today