உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் சேர்க்கையாக இந்திய அணி இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார்.
92.7 பிக் கிரிக்கெட் ஹெட்குவாட்டர் அறிமுக விழாவின் போது சேவாக் இதனைத் தெரிவித்தார். உலகக்கோப்பை டி20 போட்டிகளின் போது இவர் நேயர்களின் கிரிக்கெட் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
“நான் ஒரு கிரிக்கெட் நிபுணர் இப்போது. மைதானத்தில் நடப்பதை நேயர்களுக்கு விளக்கப்போகிறேன். வீரர்களின் காலைவாருவதும் நடக்கும்” என்று அவர் சற்றே நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்.
நம் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே போன்ற உயர்தர வீரர்கள் உள்ளனர், பவுலிங்கில் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் இந்த உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகிறேன்.
ஆஷிஷ் நெஹ்ரா கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக வீசியதை அடுத்து இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். 2011 உலகக்கோப்பையில் ஜாகீர் கானுடன் சேர்ந்து சிறப்பாக வீசியது போல் இப்போதும் வீசுவார் என்று நான் நம்புகிறேன்.
213 total views, 1 views today