டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நடைபெறும் இந்தியா, கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
எனவே மற்ற அணிகளுக்கு இது கவலையளிப்பதாகவே அமையும். கிறிஸ் கெய்ல், டேரன் பிராவொ, பொலார்ட் உள்ளிட்டவர்கள் இணையும்போது அவர்களிடையே கெமிஸ்ட்ரி உள்ளது. இவர்கள் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்த இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றி உத்வேகத்துடன் உள்ளது. இதையடுத்து இலங்கை உடனான போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் தயாராகி வருகின்றனர்.
374 total views, 1 views today