தஞ்சை, வேலூர் பாஜக வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் தென் சென்னை, வேலூர், கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கன்னியா குமரி, தஞ்சாவூர் ஆகிய 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடு கிறது. இதில் 6 தொகுதிகளுக் கான வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் களை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

இதுகுறித்த பாஜக.வின் தேசிய செயற் குழு உறுப்பினர் ஒருவர் கூறியதா வது: தமிழகத்தில் பாஜக 12 தொகுதி களில் போட்டியிட திட்டமிட்டிருந் தது. இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 6 தொகுதி களோடு சேர்த்து, தேசியச் செய லாளர் தமிழிசை சௌந்தரராஜ னுக்காக வட சென்னை, மாநிலத் துணைத் தலைவர்கள் சுரேந்திரனுக் காக மதுரை, சுப.நாகராஜனுக்காக தென்காசி, சக்கரவர்த்திக்காக ஆரணி, நரேந்திரனுக்காக கிருஷ்ண கிரி, மாநிலச் செயலாளர்கள் ஆக்ஸ் போர்டு இன்ஜினீயரிங் காலேஜ் அதிபர் சுப்பிரமணியனுக்காக திருச்சி, லோட்டஸ் டி.வி. அதிபர் செல்வக்குமாருக்காக திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளையும் பட்டியலில் வைத்திருந்தது பாஜக. இப்போது ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சையும் வேலூரும் நாங்கள் கேட்காத தொகுதிகள்.

இந்நிலையில் கூட்டணிக் கட்சி களுக்காக, எங்களுக்கு வாய்ப் புள்ள 7 தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சை, வேலூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி இருக்கிறது. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவருக்கு வேலூர் சொந்த ஊர் என்பதால் அவரும் தமிழிசை சௌந்தர்ராஜனும் வேலூர் தொகுதியை கேட்டுள்ளனர். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இவர்களில் ஒருவருக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

தஞ்சை தொகுதிக்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் பெயர்தான் முதலில் முடிவானது. மாநிலத் துணைத் தலைவரும் சீனியருமான எம்.எஸ்.ராமலிங்கமும் தஞ்சையை கேட்பதால் அங்கேயும் வேட்பா ளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. எனினும். 2 தொகுதி களுக்கும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

543 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.