தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்திகுறிப்பு
- சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் , மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்தராஜ், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
- மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன் , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும்
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஸ், கரூர் மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்
- மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், வருவாய் நிர்வாக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்றல் வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக பி.சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
253 total views, 2 views today