தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பேரணாம்பட்டில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நகர நிர்வாகிகள் ஆலியார்பாரூக்அகமத், ரவிச்சந்திரன், ஹிப்ஜீர்ரகுமான், ஆலியார்அமீன்அகமத், வேலாயுதம், அர்ஷத்அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஞானவேலு வரவேற்று பேசினார். மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் 21 கோடி வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்ககூடாது. உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தை நடைமுறைபடுத்தகூடாது, கோவையில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கிருஷ்ணன், ஸ்ரீதரன், வெங்கடாச்சலம், குமார், முல்லை சுந்தரேசன், மாவட்ட நிர்வாகிகள் பாலு, அக்பர்ஷெரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
292 total views, 1 views today