திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

காட்பாடியில், திருவள்ளுவர் பல்கலைக்கழக 9-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் குணசேகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டமளிப்பு விழா

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா காட்பாடி ஆக்சீலியம் கல்லூரி அரங்கில் புதன்கிழமை (இன்று) நடக்கிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு 90 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஆக்சீலியம் கல்லூரிக்கு 12.30 மணியளவில் வருகிறார். டெல்லி உயிர் தொழில் நுட்பவியல் துறை ஆலோசகர் எஸ்.ஆர்.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்.

30,000 மாணவ, மாணவிகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 380 மாணவ, மாணவிகளில் எம்.பில் மாணவ, மாணவிகள் 1,528 பேரும், முதுகலை மாணவ, மாணவிகள் 3ஆயிரத்து 538 பேரும், இளங்கலை மாணவ, மாணவிகள் 25 ஆயிரத்து 224 பேரும் பட்டம் பெறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

249 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.