நாட்றம்பள்ளி தாலுகா வேட்டப்பட்டு பஞ்சாயத்திற்குட்பட்ட லட்சுமணபுதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மகா சக்தி மாரியம்மன் கோயில் 54ம் ஆண்டு தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது…இந்த விழாவில் லட்சுமணபுதூர், சின்னதாய் வட்டம், கருப்பன் வட்டம், வட்டகொல்லை, நாயுடுவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தனர்.
மேலும் மாவிளக்கு, கரகம், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
274 total views, 1 views today