வேலூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது…ஆற்காடு சாலை, அண்ணா சாலை, காந்திரோடு, காட்பாடி சாலை உள்பட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்களை நடுவில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து போலீஸ் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் இடையூறாக நிறுத்தியுள்ள இருசக்கரவாகனங்களை மீட்பு வாகனம் (டூவிலர் ரெக்கவர்) மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த 6 நாட்களாக மொத்தம் 100–க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
284 total views, 1 views today
