பிஎஸ்என்எல் தங்கள் புதிய மொபைல் வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்களில் 80 சதவிகிதம் அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நிமிட கட்டணம் மற்றும் நொடி கட்டணம் வசூலிக்கும் திட்டங்களில் இணைபவர்களுக்கும் பொருந்தும்.
37 ரூபாய் செலுத்தி புதிய இணைப்பு வாங்குபவர்கள் பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 10 பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 30 பைசாவும் வசூலிக்கப்படும்.
அதேபோல், நொடி கட்டணத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு மூன்று நொடிக்கு ஒரு பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு 3 நொடிகளுக்கு 2 பைசா கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் அனுபம் வஸ்தவா கூறினார்.
308 total views, 1 views today