வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் இந்தாண்டு பி.டெக்., பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த மாதம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 112 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 134 தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது…நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் சேர்ப்பதற்கான கவுன்சிலிங் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் தொடங்கியது. வேலூரில் நடைபெறும் கவுன்சிலிங்கை வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.முதல் சுற்று கவுன்சிலிங் வரும் 22–ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
284 total views, 1 views today