பெப்ரவரி 1 முதல் அனைத்து தொலைபேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்களும் பொதுவான கட்டண முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு இணைப்பு சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் நிமிட அடிப்படையிலும், வேறு சில நிறுவனங்கள் செக்கன் அடிப்படையிலும் கட்டணங்களை அறவிட்டு வருகின்றன. அதன்படி பெப்ரவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான தொலைபேசி நிறுவனங்களினாலும் புதிதாக விநியோகிக்கப்படுகின்ற இணைப்புக்களினூடாக ஒரே அளவான கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.
இது சம்பந்தமாக அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
248 total views, 2 views today