மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை மகர விளக்கு உற்சவம் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை 1.15 மணிக்கு கோயிலின் நடைதிறந்து மகர சங்கமம் சமயமான 1.29 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனுக்கு சங்கரமா நெய் அபிஷேகம் செய்யப்படும், 4 மணிக்கு நடைதிறந்து 4.45 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6 மணியிலிருந்து 8 மணி வரை அகண்ட நெய் அபிஷேகம் ஸ்ரீ ஐயப்பனுக்கு நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு மாளியபுரத்து அம்மனுக்கு விளக்கு பூஜை, 6.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாரதனை செய்யப்படும். மேலும் மாலை 5 மணியில் இருந்து சபரிமலை மகரவிளக்கு பூஜையை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் கோயிலின் வாயிலில் அகண்ட திரையரங்கில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
மாலை 7 மணிக்கு சின்மயா யுவகேந்திராவின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெறும் என கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
372 total views, 1 views today