தமிழகத்தில் பலராலும் வலியுறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என ஒவ்வொரு காளை மாடும் முழு பரிசோதனை நடத்தப்பட பின்னரே அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளை மாடுகளை 15 மீட்டருக்குள் இளைஞர்கள் அடக்க முயற்சிக்க வேண்டும்.
காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய விலங்குகள் நல வாரியம், சமூக ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
287 total views, 1 views today