அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து, மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் த.மு.மு.க.வின் மாநில செயலாளர் கோவை சையத், பேச்சாளர் சி.கே.சனாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டு, வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தின நற்குமரன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
507 total views, 1 views today