சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டர் குறைக்கப்பட்டுள்ளது.
மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ரூ.82.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நேரடி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டரும் சந்தை விலையிலேயே விற்கப்படுகிறது.அதன்படி தலைநகர் டெல்லியில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.657-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. விலை மாற்றத்துக்குப் பிறகு தற்போது அது ரூ.575-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், விமான எரிபொருள் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் 12 சதவீதம் குறைத்துள்ளன. அதன்படி, விமான எரிபொருள் ஆயிரம் லிட்டருக்கு ரூ.4,765 குறைக்கப்பட்டுள்ளது.
214 total views, 1 views today