வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 8½ அடி உயரமுள்ள சத்யநாராயண பெருமாள் விக்ரகம் கரிக்கோல பவனியை தன்வந்திரி பீட முரளிதர சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இந்த சத்ரநாராயண பெருமாள் விக்ரக கரிக்கோல பவனியாக ஆற்காட்டில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்திற்கு வந்தது. முதியோர் இல்லத்தில் சத்யநாராயண பெருமாள் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் இல்லத்தின் துணைத்தலைவர் எஸ்.ஆர்.பி.பென்ஸ்பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் கு.சரவணண், கே.டி.மதிவாணன் உள்பட முதியோர் இல்லத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
401 total views, 1 views today