ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்திருக்கிறார் ஷங்கர் அதன்படி, இரண்டாம் பாகத்தின் கதையை ரஜினியிடம் சொல்லி, ஓகே வாங்கிவிட்டு அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் .
ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒருசில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது. கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினி தற்போது பிசியாக இருக்கிறார். விரைவில் எந்திரன்-2 படப்பிடிப்பில் இணைவார்.
எந்திரன்-2 கதாநாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார், வில்லன் வேடத்துக்கு அர்னால்டு தேர்வாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
208 total views, 1 views today