ராகவா லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களை இயக்கி நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்தப் படங்களுக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடியை அவர் நற்பணி செய்வதற்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெலுங்கில் வெளியான பட்டாசு படத்தின் தமிழ் ரீமேக்கில் லாரன்ஸ் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா என்ற பெயர் இந்த ரீமேக்குக்கு பொருத்தமாக இருக்கும் என சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி சொல்ல, பெயரை அவருக்கு விட்டுத்தந்தனர்.
அதனால், மொட்ட சிவா கெட்ட சிவா என அறிவித்த படத்தின் பெயரை பைரவா என மாற்றியுள்ளார் லாரன்ஸ். இந்த புதிய பெயருடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிடுகின்றனர்.
470 total views, 1 views today