ரூ. 2 லட்சத்திற்கு மேல் எந்தப் பொருளை வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணை குரிபிட வேண்டியது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வாங்கினாலும், விற்றாலும் பான் (PAN) எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூரினார்.
உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை தாம் மேற்க்கொண்டதாக அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை, ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
318 total views, 1 views today