வருகிற 25-ந்தேதி தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் பாதுகாப்பான ரயில் சேவையை வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது. ரயில்வே துறையில் ஜப்பானுடன் இணைந்து சில திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ரயில் விபத்துகளைத் தடுக்கும் வகையிலான ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறை திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறி்த்த அறிவிப்பு ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
197 total views, 1 views today