சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேர் திருவிழா 10-ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.இந்த விழாவில் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்…108 திவ்ய தேசங்களில்
சிறப்பு பெற்ற கோவில்களில் சோளிங்கர் ஒன்று.இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெருமாள் வீதி உலாவும் நடந்தன. இதனையொட்டி சோளிங்கர் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.திருவிழாவின் 9-வது நாளான உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதற்காக உடுப்பி அத்மார் மடம் சுவாமிகளால் செய்யப்பட்ட தேரை அலங்கரிக்கும் பணி 10 நாட்களாக நடந்தது.
நேரம் செல்லச்செல்ல பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் தேர் வடத்தை பிடித்து இழுக்க தயாராக இருந்தனர்பல்வேறு அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அன்னதானமும் நடந்தது. ஆங்காங்கே நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டு மோர், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமணி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
285 total views, 1 views today